உடன்படிக்கை ஏற்படாவிடில் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்! ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் இறுதி உடன்பாடு எட்டப்படாவிட்டால், போர்நிறுத்தத்திற்கு முந்தைய காலத்தை விடப் பலமடங்கு தீவிரமான குண்டுவீச்சுத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த "புராஜெக்ட் ஃப்ரீடம்" என்ற அமெரிக்க இராணுவ நடவடிக்கை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அதிரடி
ஈரானியப் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், ஒப்பந்தத்தை இறுதிசெய்ய ஏதுவாக இந்தச் சிறிய இடைவேளை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொண்டால், "எபிக் பியூரி" என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என்றும், அதன் பின்னர் ஹோர்முஸ் நீரிணை ஈரான் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் போக்குவரத்துக்கும் திறந்துவிடப்படும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
ஆனால், ஈரான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான மற்றும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்று அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடுகளின் கோரிக்கை
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ஏற்றே இந்த இராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதேவேளை, லெபனானில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் என்பது வெறும் காகித அளவிலான ஒன்றாகவே நீடிக்கிறது.

தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் தங்களது வான்வழித் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளன.
இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலியப் படைகளைத் தாக்கி வருகின்றனர்.
இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், களத்தில் போர் பதற்றம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam