ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பெரும் பிளவு! தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்வதிலும் சிக்கல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சிகளை தற்சமயம் ஒரு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருத முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்சியின் பல தரப்பினரைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பில் கருத்துக்களைக் கேட்டறிந்ததாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு வேட்புமனு தாக்கல்
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு 'உட்பூசல் நிறைந்த கட்சி' என இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்துவது உள்ளிட்ட தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்த பின்னர், ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய மீண்டும் ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழு கூறியுள்ளது.
தயாசிரி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இந்த குழுவில் அடங்குவதாக கூறப்படுகின்றது.
அவ்வாறு உட்பூசல்களைத் தீர்த்துக்கொள்ளாத அரசியல் கட்சிகளுக்கு வரவிருக்கும் தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பிலும் இதே நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.