வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஆபத்தான இலங்கையர்கள்! சர்வதேச அளவில் அதிரடி திட்டம்
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள அனைத்து குற்றவாளிகளை அடுத்த ஆண்டுக்குள் திரும்ப நாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான பேச்சுவார்த்தைகள் சர்வதேச அளவில் ஏற்கனவே நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரெடெரிக் உதயகுமார வூட்லர் (Wootler Udayakumara) தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சுமார் நூறு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களும், பல்வேறு குற்றவாளிகளும் வெளிநாடுகளில் இருப்பதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்ள சர்வதேச குற்றவாளிகள் கைது
இதற்கமைய, பேச்சுவார்த்தைகள் சர்வதேச அளவில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தவிர, இலங்கையில் உள்ள சர்வதேச குற்றவாளிகளைக் கூட கைது செய்து, சம்பந்தப்பட்ட நாடுகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் இலங்கை பொலிஸ் எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்து இலங்கையில் வசித்துவரும் பல நிதி மோசடியாளர்கள் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.