சீருடை அணிந்த பொலிஸாரை தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும்: கடும் தொனியில் டிரான்
பொலிஸ் சீருடையுடன் இருக்கும் போது யாரேனும் தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும், இல்லையேல் சீருடை அணிவதில் பயனில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், யுக்திய நடவடிக்கைக்கு சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதிலும், அது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேச சமூக பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
யுக்திய நடவடிக்கை
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்,
''கடுமையான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும், ஜனாதிபதி எனக்கு பலத்தை வழங்கியதால் தான் இவ்வாறு கூறுகின்றேன்.
யுக்திய நடவடிக்கையை ஆரம்பித்து, நாட்டை சுத்தம் செய்ய நினைத்தேன். சில யூடியூபர்கள் போதைப்பொருள் மோசடியாளர்களின் பணத்தில் வாழ்கின்றனர்.
சர்வதேசத்தின் விருப்பம்
இதன்காரணமாக அவர்களை பயன்படுத்தி எம்மை விமர்சிக்கின்றனர். யுக்திய நடவடிக்கையை நிறுத்துங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையும் கூறியது, எங்கள் நாட்டில், நாங்கள் விரும்பியபடி செயல்படுகிறோம்.
மேலும், சர்வதேசத்தின் விருப்பப்படி நான் செயல்படவில்லை.பாதாள உலக குழு வழக்குகளில் வாதாடும் சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள்.
அத்தோடு பாதாள உலக குழுவினர் மில்லியன் கணக்கில் பணம் ஈட்டுகின்றனர். பாதாள உலக குழுக்களும், போதைப்பொருள் வியாபாரிகளையும் நாட்டில் வைத்திருக்க முடியாது. அவர்கள் இந்த நாட்டிற்கு ஒரு சுமை" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |