உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டனை உறுதி: டிரான் எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் எவராக இருந்தாலும் தராதரம் பார்க்காது தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் உறுதியளித்துள்ளார்.
களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தீவிர விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து என் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.
ஆனால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு அதிகாரம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காது தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு நான் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன்.
இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபைக்கு நான் உறுதியளிக்கிறேன். அத்துடன் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டும் கர்தினால் ஆண்டகை அவர்கள் இந்த விசாரணையில் எம்முடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.
[HT8CHYT ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |