90ஸ் தலைமுறையினரை விட அறிவாற்றலில் பின்தங்கும் GEN Z தலைமுறையினர்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெனரேஷன் Z (Gen Z) தலைமுறையின் அறிவாற்றல், அவர்களுக்கு முந்தைய மில்லேனியல் தலைமுறையை விடக் குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் மற்றும் நரம்பியல் நிபுணர்களின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய அறிவாற்றல் அளவுகோள்களில் தங்களுக்குப் பிந்தைய தலைமுறையை மிஞ்சிய ஒரே தலைமுறையாக மில்லேனியல்கள் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
ஆய்வில் தகவல்
கவனம் செலுத்தும் திறன், பிரச்சினை தீர்க்கும் ஆற்றல், வாசிப்பு மற்றும் கணிதத் திறன், மொத்த IQ உள்ளிட்ட பல துறைகளில் Gen Z, மில்லேனியல்களை விட குறைந்த முடிவுகளைப் பதிவு செய்துள்ளதாக நரம்பியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
குறிப்பாக, தங்களுக்குப் முந்தைய தலைமுறையை விட குறைவான மதிப்பெண்களைப் பெற்ற முதல் தலைமுறையாக Gen Z இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஆசிரியரும் நரம்பியல் விஞ்ஞானியுமான வைத்தியர் ஜாரெட் கூனி ஹோர்வத், அதிகமான முறையான கல்வி வாய்ப்புகள் இருந்தபோதும் Gen Z தலைமுறையின் அறிவாற்றல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்க செனட் வர்த்தகம், அறிவியல் மற்றும் போக்குவரத்து குழுவின் முன்னிலையில் சாட்சி வழங்கிய அவர், தொழில்நுட்பத்தை அதிகமாக சார்ந்த கல்வி முறைகள் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேரடித் தொடர்பு
2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு அறிவாற்றல் திறன்களில் சரிவு தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். நியூயோர்க் போஸ்டுக்கு வழங்கிய பேட்டியில், இன்றைய இளைஞர்கள் தங்கள் விழிப்புநேரத்தின் பாதிக்கும் மேற்பட்ட நேரத்தை திரைகளின் முன் செலவிடுவதாக ஹோர்வத் தெரிவித்தார்.
இது மனிதர்கள் இயற்கையாகக் கற்றுக்கொள்ளும் முறையை பாதிப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மனித வளர்ச்சி நேரடித் தொடர்பு மற்றும் ஆழமான ஈடுபாட்டை ஆதரிக்கிறது; திரை அடிப்படையிலான கற்றல் இதற்கு இடையூறாக அமைகிறது என்றும் அவர்கள் கூறினர்.
கல்வி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது மட்டும் தீர்வாகாது என ஹோர்வத் வலியுறுத்தினார். மனித மூளை தகவலைப் புரிந்து, சேமித்து, பயன்படுத்தும் விதத்துடன் தொழில்நுட்பம் பொருந்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இளம் தலைமுறையின் அறிவாற்றல்
மனிதர்கள் பிற மனிதர்களிடமிருந்து நேரடியாகவும், தொடர்ச்சியான ஆழமான பயிற்சியினூடாகவும் கற்றுக்கொள்ள உயிரியல் ரீதியாக அமைக்கப்பட்டுள்ளனர் என்றார். இந்த போக்கு அமெரிக்காவுக்கு மட்டும் வரம்புப்பட்டதல்ல.
குறைந்தது 80 நாடுகளில் இதே போன்ற நிலை காணப்படுவதாகவும், வகுப்பறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தத் தொடங்கியவுடன் கல்வித் திறன் கடுமையாகக் குறைவதாகவும் ஹோர்வத் கூறினார்.

ஆறு தசாப்தங்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வின் முடிவுகளை முன்வைத்த அவர், வகுப்பறைகளில் தொழில்நுட்பத்தின் அதிகரிப்பு, மாணவர்களின் கற்றல் முடிவுகளை மோசமாக பாதித்துள்ளதாகத் தெரிவித்தார்.
திரை சார்ந்த கல்வி முறைகள் இளம் தலைமுறையின் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்ற கவலைகளை இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.