யாழில் சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழப்பு: பொலிஸார் தீவிர விசாரணை
காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூராவத்தை சுன்னாகத்தைச் சேர்ந்த வீரசிங்கம் 68 வயதுடைய அம்பிகைபாகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 23ஆம் திகதி காதுக்குத்து காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் கண், காது, தொண்டை (E.N.T) சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் 41ஆம் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு வெள்ளிக்கிழமை (06) உயிரிழந்தார்.
தந்தையின் மரணம் வைத்தியர்களின் தவறே எனத் தெரிவித்து மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam