கிடைக்கப்போகும் வாய்ப்பு!! புலம்பெயர் தமிழர்களுக்கான செய்தி
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. கொழும்பில் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான ATMகளுக்கு பலமுறை வந்து நுட்பமான முறையில் பலரின் ATM அட்டைகளில் பணம் திருடியவர் கடுவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை >>> மேலும் படிக்க
2. வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள் சுற்றி திரிவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கின்ரோஸ் உயிர்காக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் திவங்க பெர்னாண்டோ என்பவர் வெள்ளவத்தை கடலில் நீராடும் போது முதலை குட்டியொன்றை பிடித்துள்ளார். குறித்த முதலைக் குட்டியை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
வெள்ளவத்தை கடற்பகுதிக்கு ஆபத்து - மக்களுக்கு எச்சரிக்கை >>> மேலும் படிக்க
3. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கும் வலைப்பந்து மகளர் அணிக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பேஸ்புக் பயன்படுத்தும் கோட்டாபய >>> மேலும் படிக்க
4. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 176,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேநேரம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொழும்பு, யாழில் இன்று பதிவாகியுள்ள தங்க விலை! தங்க நகை வாங்கவுள்ளோருக்கான தகவல் >>> மேலும் படிக்க
5. புலம்பெயர் மக்கள் இலங்கையில் எந்த பிரதேசத்திலும் முதலீடு செய்யலாம். அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து ஓர் அழைப்பு! பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் >>> மேலும் படிக்க
6. இலங்கையில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி வர்த்தகம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பிஸ்கட், சவர்க்காரம் பற்பசை, மிளகாய்த் தூள், மசாலா தூள் போன்ற பொருட்களில் இந்த மோசடி இடம்பெறுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பொருட்களை வாங்கும் போது மிகவும் அவதானம் >>> மேலும் படிக்க
7. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி >>> மேலும் படிக்க
8. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுதலை >>> மேலும் படிக்க
9. அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் ஓய்வு வயது! அமைச்சரவை கூட்டத்திற்கு சென்ற திருத்தங்கள் - விரைவில் சுற்றறிக்கை >>> மேலும் படிக்க
10. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
கூட்டத்தொடர் ஆரம்பத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பமானது ஐ.நா கூட்டத்தொடர்! மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி >>> மேலும் படிக்க

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
