புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து ஓர் அழைப்பு! பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்
புலம்பெயர் மக்கள் இலங்கையில் எந்த பிரதேசத்திலும் முதலீடு செய்யலாம். அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை தமிழ் மக்கள் புலம்பெயர் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஆரம்பத்தில் இலங்கையுடன் ஒரு பிரச்சினை காணப்பட்டது. நம்பிக்கையின்மை காணப்பட்டது.
பிரச்சினைகளை தீர்த்து வருகின்றோம்..
அமைப்புக்கள் தடை, காணி பிரச்சினை அரசியல் கைதிகள் விவகாரம், என பல பிரச்சினைகள் தமிழ் புலம்பெயர் மக்களுக்கு காணப்பட்டன. அந்தப் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வருகிறோம்.
தடை செய்யப்பட்ட அமைப்புகள் தற்போது தடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர் மக்கள் இலங்கையில் எந்த பிரதேசத்திலும் முதலீடு செய்யலாம்.
அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். கனடா நோர்வே பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழ் மக்கள் தற்போது இலங்கையின் நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கையில் முதலீடு செய்ய வருவார்கள் என்று நம்புகிறோம்.