டொலர் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.61 ரூபாவாகவும், கொள்வனவு விலை 358.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 374.57 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 359.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 430.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 414.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam