நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுதலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு செல்ல தடைவிதிப்பு

அத்துடன் தமிதா அபேரத்ன வெளிநாடு செல்ல தடைவிதித்து நீதவான் திலின கமகே உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்து, அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தமிதா அபேரத்ன அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
காலிமுகத்திடல் போராட்ட களத்தில் தமிதா அபேரத்ன முக்கிய செயற்பாட்டாளராக இயங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam