அரச ஊழியர்களின் ஓய்வு வயது! அமைச்சரவை கூட்டத்திற்கு சென்ற திருத்தங்கள் - விரைவில் சுற்றறிக்கை
அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம்
இது தொடர்பில் மேலும், அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! வெளியாகியுள்ள புதிய தகவல் |
இது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய குறிப்பாணையை கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று அல்லது எதிர்வரும் வாரம் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயதெல்லை
ஜனாதிபதியினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 65 வயதாக இருந்த அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள் தவிர 60 வயதை எட்டிய அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
இது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட இறுதியில் வீட்டிற்கு செல்லப்போகும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள்! வெளியாகியுள்ள தகவல் |