அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! வெளியாகியுள்ள புதிய தகவல்
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க அரச நிர்வாக அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான அதிக செலவு தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவுடன் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசேட கொடுப்பனவிற்கான வேலைத்திட்டம்
இதன்போது ஐந்து நாட்களும் வேலைக்குச் செல்லும் அரச ஊழியர்களுக்கு விசேட போக்குவரத்துக் கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
வங்கிக் கடன் வட்டித் தொகை அதிகரிப்பு
இதற்கு மேலதிகமாக அரச ஊழியர்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கும் நிவாரணம் வழங்க தலையீடு செய்வதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாரத்தின் ஐந்து நாட்களும் பணிக்கு சமூகமளிக்கும் போது போக்குவரத்துச் செலவு அதிகமாக காணப்படும் நிலையில், இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய போது அதற்கு நல்ல பதிலொன்று கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri