இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பேஸ்புக் பயன்படுத்தும் கோட்டாபய
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கும் வலைப்பந்து மகளர் அணிக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ளார்.
பேஸ்புக் பக்கம்
இதற்கு முன்னதாக, கடைசியாக ஜுலை மாதம் 13ஆம் திகதி அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.
“ஆசியக் கிண்ணத்தை ஆறாவது தடவையாக வென்று, எமது தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் வலைப்பந்தாட்ட அணிக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!” என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தப்பியோட்டம்
நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய கோட்டபாய, இரண்டு மாதங்களின் பின்னர் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாமல் மற்றும் மகிந்தவின் பதிவு
இதேவேளை, இலங்கை அணியின் வெற்றிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெரிய போட்டித் தொடர் ஒன்றில் இலங்கை இறுதியாக கடந்த 2014ம் ஆண்டிலேயே சாம்பியன் பட்டம் வென்றிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
மிகச் சிறந்த அர்ப்பணிப்பினை அணி வீரர்கள் வெளிப்படுத்தியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அணி எவ்வாறு முன்னேறியது என்பதனை நேரில் பார்த்த காரணமாக இந்த வெற்றி அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த்து என்பது தமக்கு நன்றாகத் தெரியும் என நாமல் ராஜபக்ச டுவிட்டர் பதிவொன்றில் கூறியுள்ளார்.
What a victory for #SriLanka! The last time SL won a major tournament was back in 2014 but this one is special. It was a brilliant display of fight & determination. Having seen how this team progressed I know how much this victory means to them. Congratulations & well done! 🏆🇱🇰
— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 11, 2022
இதேவேளை, ஆசிய கிண்ண வலைபந்தாட்டம் மற்றும் கிரிக்கட் போட்டித் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மிகச் சிறந்த அணி ஐக்கியத்தை இந்தப் போட்டித் தொடர்களில் காண கிடைத்தது என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
What a day for #SriLankan sports. Congratulations to the womens #netball team for being crowned the undefeated #Asian netball champions 2022 and to our #Cricket team for winning the #AsiaCup2022Final. What a display of sportsmanship, unity and character. #🇱🇰 pic.twitter.com/yK6F9SQFDQ
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) September 11, 2022

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri
