செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் என்புக்கூடு அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றையதினமும்(18.6.2026) ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அகழ்வு பணி
சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு , கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதற்குள் என்புக்கூடுகள் காணப்படுவதனால், அதனை பக்குவமாக சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 387 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 367 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri