சட்டவிரோத வழிகளில் குவிக்கப்பட்ட பல கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்!

Sri Lanka Crime Law and Order
By Rakesh Jun 18, 2026 01:14 PM GMT
Report

சட்டவிரோத மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் பல கோடி ரூபா பெறுமதியுடைய சொத்துக்களை முடக்குவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் ஆகியன மேற்கொண்ட இரு வேறு விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், படபொல, உடுமுல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்டவிரோதமான வழிகளில் பணம் சம்பாதிப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முதலாவது விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

காங்கேசன்துறையில் நடந்த நூதன திருட்டு - கைதான எட்டு பேர் தொடர்பில் வெளியான தகவல்

காங்கேசன்துறையில் நடந்த நூதன திருட்டு - கைதான எட்டு பேர் தொடர்பில் வெளியான தகவல்

சொத்துக்கள் முடக்கம்

இதன்போது, மேற்படி சந்தேகநபரின் மனைவியின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோத வருமானத்தின் மூலம் பெறப்பட்டவை என்பதைப் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.

சட்டவிரோத வழிகளில் குவிக்கப்பட்ட பல கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்! | Worth Crores Of Rupees Accumulated Illega Frozen

முடக்கப்பட்ட சொத்துக்களின் விவரங்கள் வருமாறு சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 4.5 ஏக்கர் காணி, சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 54 பேர்ச் காணி, சுமார் 30 மில்லியன் ரூபா மதிப்பீட்டைக் கொண்ட இரண்டு மாடி வீடு என்பனவாகும்.

பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜூன் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 7 நாட்களுக்கு இந்தச் சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவலில் சுரேஷ் சலே ஆடைகள் களையப்பட்டாரா..! அரசாங்கத்தின் அறிவிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவலில் சுரேஷ் சலே ஆடைகள் களையப்பட்டாரா..! அரசாங்கத்தின் அறிவிப்பு

விளக்கமறியல்

மற்றொரு சம்பவத்தில், பேலியகொட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருமானத்தில் பெருமளவிலான சொத்துக்களைச் சேர்த்துள்ளதை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கண்டுபிடித்தது.

அவர் போதைப்பொருள் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி, கட்டுவாவல பகுதியில் 10 பேர்ச் காணியைக் கொள்வனவு செய்து, அதில் சொகுசான இரண்டு மாடி வீடு ஒன்றைக் கட்டியெழுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத வழிகளில் குவிக்கப்பட்ட பல கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்! | Worth Crores Of Rupees Accumulated Illega Frozen

மேற்படி பெண் கடந்த மே மாதம் 21ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வரும் ஜூன் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்குச் சொந்தமான கட்டுவாவல சொத்துக்களும் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூன் 17ஆம் திகதி முதல் 7 நாள்களுக்குப் பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரணத்தை நோக்கி நகரும் சுரேஷ் சலே.. நரகத்திற்கு திரும்ப விரும்பவில்லையாம்!!

மரணத்தை நோக்கி நகரும் சுரேஷ் சலே.. நரகத்திற்கு திரும்ப விரும்பவில்லையாம்!!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US