யாழில் தொடருந்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு
யாழ்ப்பாணம்- நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி , இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(18.6.2026) இடம்பெற்றுள்ளது.
பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விசாரணை
குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில் , விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாது , இன்றைய தினம் மீண்டும் கடமைக்கு திரும்பி இருந்நதார்.
இந்தநிலையில், பலாலி இராணுவ அதிகாரிகள் , நீண்ட காலம் கடமைக்கு திரும்பாதமை குறித்து , கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று விளக்கம் கொடுக்குமாறு பணித்திருந்தனர்.

இதனையடுத்து, சிப்பாய் பலாலியில் இருந்து வெளியேறிய நிலையில் அரியாலை நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri