பேருந்தில் பணப்பையை சூசகமான முறையில் திருடிய நபரின் அதிர்ச்சி செயல்
ஹட்டன் நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணியொருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
குறித்த நபர், பணப்பையை திருடி அதிலிருந்த ATM அட்டையைப் பயன்படுத்தி பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
26ஆம் திகதி குறித்த பேருந்து கினிகத்தேன பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதில் ஏறிய நபர் ஒருவர் பணப்பையின் உரிமையாளருக்கு அருகில் அமர்ந்து அவரின் சட்டைப்பையில் வைக்கப்பட்டிருந்த பணப்பையைத் திருடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உரிமையாளருக்கு வந்த குறுஞ்செய்தி
அந்தப் பணப்பையில் இருந்த 18,000 ரூபா பணத்தை எடுத்துக்கொண்ட சந்தேகநபர், அதிலிருந்த ATM அட்டையைப் பயன்படுத்தி ஹட்டன் டிக்கோயா நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் முற்பகல் 11.30 மணியளவில் சுமார் 3,000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளார்.

ஹட்டன் நகரைச் சென்றடைந்த பின்னர் பணப்பை காணாமல் போனதை அறிந்த அதன் உரிமையாளர், உடனடியாக பேருந்து நடத்துநருக்கு அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், ATM அட்டையைப் பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான குறுஞ்செய்தி கிடைத்ததைத் தொடர்ந்து, தனது அட்டையைச் செயலிழக்கச் செய்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் - 071 859 1117
ஹட்டன் பொலிஸ் நிலையம் - 051 222 2222
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 19 மணி நேரம் முன்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
போருக்காக அழைக்கலாம்... தயாராக இருக்க 100,000 பிரித்தானிய ரிசர்வ் படையினருக்கு அறிவுறுத்தல் News Lankasri