24 மணிநேரத்திற்குள் நிரூபிக்கப்பட்ட விடயம்! ஜனாதிபதியின் விசேட உத்தரவு - வெளியானது முழு விபரம்
இலங்கையில் இன்றைய தினம் அரசியல் ரீதியாகவும் சமூகத்திலும் பல விடயங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பிலும், மேலும் பல முக்கிய தகவல்கள் தமிழ்வின் தளத்தில் வெளியாகியிருந்தன.
அவற்றில் மிக முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டவர்களாயின் பின்வரும் செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க >>> இரவோடு இரவாக போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கொடூர தாக்குதல்
2. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>> முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு
3. இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன இன்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க >>> இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன
4. காலி முகத்திடலில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிராக ஒன்றுதிரள்வோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> ரணிலின் காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராக அணி திரளுங்கள்! அநுர அழைப்பு
5. நாடு முழுவதும் இன்று 100,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த எரிவாயு கொள்கலன்களில் 70,000 எரிவாயு கொள்கலன்கள் கொழும்பிற்கு வெளியே உள்ள ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ வெளியிட்ட தகவல்
6. ஜனநாயகத்தை பாதுகாக்க சட்டத்தை முறையாக செயற்படுத்துவோம் என புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> இலங்கையின் பிரதமராக பதவியேற்றவுடன் தினேஷ் குணவர்தனவின் முதல் அறிவிப்பு
7. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் 'தாராளவாத ஜனநாயகவாதி' என்ற தனது பிம்பத்தை முற்றிலுமாக அழித்து, ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக தன்னை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார் என 43வது படைப் பிரிவு அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> பதவிக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் தன்னை அடக்குமுறை சர்வாதிகாரியாக நிரூபித்த ரணில்! சம்பிக்க ஆவேசம்
8. 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்றைய தினம் பதவியேற்றுள்ளனர்.
மேலும் படிக்க >>> 18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! பெரும்பாலானோர் மொட்டு கட்சியினர் - வெளியானது முழு விபரம்
9. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 368 ரூபா 63 சதமாக பதிவாகியுள்ளது. அதன்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 94 சதமாக பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க >>> டொலர் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
10. அனைத்து திசைகளில் இருந்தும் தம்மை படையினர் தாக்கியதாக காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்த இளைஞர் செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.