பதவிக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் தன்னை அடக்குமுறை சர்வாதிகாரியாக நிரூபித்த ரணில்! சம்பிக்க ஆவேசம்
தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் 'தாராளவாத ஜனநாயகவாதி' என்ற தனது பிம்பத்தை முற்றிலுமாக அழித்து, ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக தன்னை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார் என 43வது படைப் பிரிவு அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோபூர்வ டுவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தன்னை ஒரு சர்வாதிகாரியாக வெளிப்படுத்தியுள்ளார்.
Within 24hrs into #ExecutivePresidency Mr Ranil Wickremasinghe @RW_UNP has totally destroyed the image of 'liberal democrat' that he has been portraying of himself nationally and internationally for the past 45 years, and assumed that of an oppressive totalitarian dictator! (1/2)
— Patali Champika Ranawaka (@pcranawaka) July 22, 2022
கடந்த 45 ஆண்டுகளாக 'தாராளவாத ஜனநாயகவாதி' என்ற தனது பிம்பத்தை ரணில் அழித்து, ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக தன்னை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று அதிகாலை காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை அடித்து அவர்களது கூடாரங்களை கலைத்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இதனால் கொழும்பின் பல பகுதிகளில் காலிமுகத்திடல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ரணிலின் காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராக அணி திரளுங்கள்! அநுர அழைப்பு |
காலிமுகத்திடலில் இருந்து திடீரென சென்ற பொலிஸார்! சிறிது நேரத்தில் குவிந்த படையினர் - நேரடி ரிப்போர்ட் (Video) |