காலிமுகத்திடலில் இருந்து திடீரென சென்ற பொலிஸார்! சிறிது நேரத்தில் குவிந்த படையினர் - நேரடி ரிப்போர்ட் (Video)
கொழும்பில் இன்று அதிகாலை காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் சம்பவ இடத்தில் இருந்த இளைஞரொருவர் அப்பகுதியில் பதிவாகிய மற்றும் தான் நேரடியாக பார்த்த சம்பவங்களை எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் பாதுகாப்பிற்காக இருந்த பொலிஸார் அனைவரும் காலிமுகத்திடல் பகுதியில் இருந்து சென்றுவிட்டனர்.
| கொழும்பில் நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம் - இராணுவ முற்றுகைக்கான காரணம் அம்பலம் |
இதனை தொடர்ந்து பெருமளவு விசேட அதிரடிப்படையினர் திடீரென இப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டக்களப்பகுதியை முழுமையாக சுற்றிவளைத்துவிட்டனர்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் எமக்கு ஏற்கனவே தகவல் கிடைத்திருந்தது. நாங்களும் விழிப்பாகவே இருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காலிமுகத்திடல் பகுதியில் தாக்குதலில் காயமடைந்தவர்களை நோயாளர் காவு வண்டி மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri