குறைக்கப்பட்டது உணவுப் பொருட்களின் விலைகள்! வெளியானது அறிவிப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது, இந்த ஆட்சியில் அரசியல் சூழ்ச்சிக்கு ஒருபோதும் இடமில்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், என்னைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க ஆளும் தரப்புக்குள் சிலர் சூழ்ச்சி செய்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் வதந்தி.
பிரதமராகிறாரா கோட்டாபய..! தன்னிடமுள்ள பதவி தொடர்பில் தினேஷின் தகவல் >>> மேலும் படிக்க
2. நாட்டில் பொது மக்களுக்கு பணப்பரிசுகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு பணப்பரிசு! பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள முடிவு >>> மேலும் படிக்க
3. நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு சபையில் கோரியிருந்தார்.
இதனையடுத்து மறைந்த எலிசபெத் மகாராணிக்கு நாடாளுமன்றில் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி >>> மேலும் படிக்க
4. சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்டத்திலான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஐஎம்எப் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை: அமைச்சர் சுசில் பகிரங்க அறிவிப்பு >>> மேலும் படிக்க
5. அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் இன்று குறைப்பு! வெளியானது விபரம் >>> மேலும் படிக்க
6. இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
10 மணித்தியால மின்சார தடை! இலங்கை மக்களை தயாராகுமாறு அறிவிப்பு >>> மேலும் படிக்க
7. இலங்கையில் நடைமுறையில் உள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர அமைப்பில் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி புதிய அம்சமாக, வாகன வகைக்குள் அடங்காத அத்தியாவசிய உபகரணங்களுக்கான பதிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம்: இலங்கையில் நடைமுறையில் உள்ள முறைமையில் புதிய அம்சம்! வெளியான அறிவிப்பு >>> மேலும் படிக்க
8. எதிர்வரும் 19ம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அனுஸ்டிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செப்டெம்பர் 19 தேசிய துக்க தினமாக அறிவிப்பு! ஜனாதிபதி பணிப்புரை >>> மேலும் படிக்க
9. புதிதாக பதவியேற்றுள்ள 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள், அதற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளை ஒதுக்க வேண்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, ஒவ்வொரு அமைச்சருக்கும் அந்தந்த அமைச்சுகளில் இருந்து 8 வாகனங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
புதிதாக பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அதிசொகுசு வாகனங்கள் >>> மேலும் படிக்க
10. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்! ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி >>> மேலும் படிக்க

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
