அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் இன்று குறைப்பு! வெளியானது விபரம்
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த விடயத்தை சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் அரிசி மாவு ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக குறைக்கப்பட்ட விலைகள்
பொருட்கள் | குறைக்கப்பட முன்னர் விலை | குறைக்கப்பட்ட பின்னர் விலை |
வெள்ளை அரிசி | 195 | 185 |
நாட்டரிசி | 198 | 194 |
சிவப்பு பருப்பு | 460 | 429 |
வெள்ளை சீனி | 298 | 279 |
நெத்தலி | 1375 | 1350 |
வெள்ளை பூடு | 750 | 595 |
வட்டானா பருப்பு | 375 | 315 |
கடந்த இரு வாரங்களுக்கு முன் விலை குறைப்பு
இதேவேளை கடந்த இருவாரங்களுக்கு முன்னர் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் லங்கா சதொசவில் குறைக்கப்பட்டிருந்தன.
அதன்படி சீனி, அரிசி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளைப்பூடு உள்ளிட்ட பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
