ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றாக சிரியா வழியாக எண்ணெய் வழித்தடம்: பிரான்ஸ் வெளி விவகார அமைச்சர் தகவல்
ஹோர்முஸ் நீரிணையில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மாற்றாக, வளைகுடா நாடுகளின் எண்ணெயைக் கொண்டு செல்வதற்கு சிரியாவை ஒரு மாற்று வழித்தடமாகப் பயன்படுத்துவது குறித்து பிரான்ஸ் பரிசீலித்து வருகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா - ஈரான் இடையிலான அண்மைய தாக்குதல்கள் உலக எரிசக்தி விநியோகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோல் பரோட் தெரிவித்துள்ளார்.
தடையற்ற எரிசக்தி விநியோகம்
TF1-க்கு அளித்த பேட்டியில், உலகச் சந்தைகளுக்கு தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த பன்முகப்படுத்தப்பட்ட புதிய எரிசக்தி வழித்தடங்கள் அவசியம் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "இந்த நெருக்கடி தொடங்கியதில் இருந்தே நாம் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளிலும், ஆங்காங்கே ஏற்படும் வழித்தட முடக்கங்களை மட்டுமே சார்ந்து இருக்காமல் இருக்க மாற்று வழிகளைத் தயார் செய்யும் யோசனையும் ஒன்றாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சில நாட்களுக்கு முன்பு சிரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அங்கு சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேசியிருந்ததும், அதன் தொடர்ச்சியாகவே இந்த மாற்று எண்ணெய் வழித்தடப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam