எரிபொருள் விநியோகம்: இலங்கையில் நடைமுறையில் உள்ள முறைமையில் புதிய அம்சம்! வெளியான அறிவிப்பு
புதிய அம்சம்
இலங்கையில் நடைமுறையில் உள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர அமைப்பில் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி புதிய அம்சமாக, வாகன வகைக்குள் அடங்காத அத்தியாவசிய உபகரணங்களுக்கான பதிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA) இன்று அறிவித்துள்ளது.
கிடைக்கப் பெற்றுள்ள திறன்
ஜெனரேட்டர்கள், புல் வெட்டும் கருவிகள் மற்றும் பிற உபகரணங்கள் போன்ற வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூ.ஆர் முறை மூலம் எரிபொருளை விநியோகிக்கும் திறன் இப்போது கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவு செய்யும் முறைகள் தொடர்பான விபரங்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் பொது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் கூறியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
