10 மணித்தியால மின்சார தடை! இலங்கை மக்களை தயாராகுமாறு அறிவிப்பு
இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களை தயாராகுமாறு அறிவிப்பு
இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர மேலும் தெரிவிக்கையில், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும்.

மின்சார உற்பத்தி குறைப்பு
இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும். 2022 அக்டோபர் மாதத்திற்குள் இலங்கை மின்சார சபைக்கு போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால், மின்சார உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருக்கும்.
தற்போது நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுகின்றது.

மழைக்காலம் முடிவடையும் போது இலங்கையில் நீர் மின் உற்பத்தியில் பாரிய சிக்கல்கள் ஏற்படும். இதற்கிடையில், நுரைச்சோலை மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் பராமரிப்பு காரணமாக இயங்கவில்லை.
நவம்பர் 2022 இற்குள் அதை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri