மின் உற்பத்திக்கு தேவையான போதியளவு நீர்மட்டம்! மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்
மின் உற்பத்திக்கு தேவையான போதியளவு நீர்மட்டம் காணப்படுவதாகவும், நிலக்கரி இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் பொதுப்பாவனையாளர் ஆணையகத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படவில்லை
அத்துடன் தற்போது மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாகவும் பொதுப்பாவனையாளர் ஆணையகத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், கடந்த வாரத்தில் 1 மணித்தியால மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த ஒரு மணித்தியாலமும் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படவில்லை.
கடந்த மூன்றாம் திகதி முதல் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் தற்போது மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே என கூறியுள்ளார்.

நிலக்கரி பிரச்சினை
மேலும் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையால் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை. தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்வதற்கான சாதாகமான நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மின் உற்பத்திக்கான நிலக்கரி பிரச்சினை ஏற்படவில்லை எனில் ஒரு மணித்தியால மின் துண்டிப்பு கூட முன்னெடுக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மின் உற்பத்திக்கு தேவையான நீர் மட்டம் மற்றும் நிலக்கரி போதியளவு இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்காது என அவர் மேலும் கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 11 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri