மின் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவு நேற்று நள்ளிரவுடன் நிறைவு : ஜனக ரத்நாயக்க
மின்சாரக் கட்டண திருத்தத்தை இறுதி செய்யும் செயல்முறைக்கான முன்மொழிவுகளை பொதுமக்கள் சமர்ப்பிக்கும் காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இதுவரை 150 முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், மின் கட்டண திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து பொது கலந்தாய்வை ஜூலை 28ம் திகதி நேரில் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
இலங்கை மின்சார சபை - எரிசக்தி அமைச்சு

திருத்தியமைக்க உத்தேசித்துள்ள கட்டணங்களை விவாதித்து இறுதி செய்ய இலங்கைமின்சார சபை (CEB) மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியவற்றை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அழைக்கும் என்று தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு கேட்டுக் கொண்டது.
எழுத்துப்பூர்வ கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி திகதி
ஜூலை 18 என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திருத்தம் எந்தவொரு தனி நபரின் விருப்பத்தின்படியும் செய்யப்படாது,
மாறாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் முறைப்படி செய்யப்படும் என ஆணைக்குழுவின்
தலைவர் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri