இன்றைய நாணய மாற்று விகிதம்! ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.38 ரூபாவாகவும், கொள்வனவு விலை 358.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 370.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 355.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 426.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 410.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
