பொது மக்களுக்கு பணப்பரிசு! பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள முடிவு
நாட்டில் பொது மக்களுக்கு பணப்பரிசுகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பணப்பரிசு
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், துப்பாக்கிகளை மறைத்து வைத்திருப்பது தொடர்பாக தகவல் வழங்குவோருக்கு பணப்பரிசுகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த பணப்பரிசுகளின் பெறுமதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.
இதேவேளை மேல் மற்றும் தென் மாகாணங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துமாறு மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஆயுதமேந்திய அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் வாகனங்களை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பாதாள உலகக்குழு உறுப்பினர்கள்
கொலைகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுக்கு வெளிநாட்டு பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் தலைமை தாங்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொலைகள் மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பல துப்பாக்கிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.