நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி வீழ்ச்சி - மின்சாரம் வழங்குவதில் சிக்கல்
தரம் குறைந்த நிலக்கரி பயன்பாடு காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தித் திறன் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அண்மைக்காலமாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், நிலக்கரி மூலமான மின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கை மத்திய வங்கி தனது தினசரி பொருளாதார தரவுகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்தத் தரவுகளுக்கமைய, கடந்த சில வாரங்களில் நிலக்கரி மின் உற்பத்தியில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பு
கடந்த 03 ஆம் திகதி நிலக்கரி மூலம் 34.2 கிகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டிருந்தது. நேற்று முன்தின நிலவரத்திற்கமைய, அந்த அளவு 26.2 கிகாவாட் வரை கணிசமாகக் குறைந்துள்ளது.

நிலக்கரி மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
03 ஆம் திகதி 18.7 கிகாவாட்டாக இருந்த டீசல் மின் உற்பத்தி, மார்ச் 17 ஆம் திகதியளவில் 26 கிகாவாட் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிக்கலான எரிபொருள் சூழலில் மின் உற்பத்தியில் டீசல் மின் நிலையங்களின் பங்களிப்பை அதிகரிப்பது, தடையற்ற மின்சார விநியோகத்தைச் சீர்குலைக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam