கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்கள் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில், வெளிநாட்டு பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் அறிவிப்பு எதுவும் தேவையில்லாத பசுமை வழித்தடம் வழியாக சட்டவிரோதமாக சீன சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
5.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண்கள் இன்று காலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
பெண்கள் இருவர் கைது
கைது செய்யப்பட்ட இருவரும் சீனாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர்கள் என தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை 12.30 மணிக்கு, சீனாவின் செங்டுவிலிருந்து எயார் சைனா விமானம் CA-425 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
தங்கள் பயணப் பைகளில் 38,000 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 190 அட்டைப் பெட்டிகளை மறைத்து வைத்திருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.