கட்டுநாயக்க விமான நிலைய பெண்கள் கழிப்பறைக்குள் சிக்கிய மர்மம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி 18 லட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவை விமான நிலையத்தின் பெண்கள் மலசலகூடத்திலிருந்த இரண்டு குப்பைத் தொட்டிகளுக்குள் போடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் தொகை
இந்த நிலையில் இந்தப் போதைப்பொருள் தொகையை நேற்று காலை விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளளனர்.

1 கிலோ 187 கிராம் எடைக் கொண்ட இந்த ஹஷிஸ் போதைப்பொருள் தொகை 7 பக்கெட்டுகளுக்குள் பொதியிடப்பட்டிருந்தது.
அத்துடன், அவற்றுடன் சில ஜோடிப் பெண்களின் காலணிகளும் சில பெண்களின் ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்திலிருந்து வெளியேறத் தயாராகும் போது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், விமானப் பயணி ஒருவர் போதைப்பொருள் தொகையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.