போதைப்பொருள் விற்பனை செய்த நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை
கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கைவசம் வைத்திருந்த மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகாளவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
2022 ஆம் ஆண்டு முகத்துவாரம் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 24 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, சட்டமா அதிபரினால் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.