இலங்கையை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் - அதிர்ச்சி தரும் புலனாய்வு அறிக்கை
இஸ்ரேலின் புலனாய்வுதுறை உலகில் எல்லா இடத்திலும் இருப்பது போன்று இலங்கையிலும் உள்ளது என்று பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போதைய என்பிபி அரசிற்கும் பெரும் அச்சுறுத்தல் உள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுடன் நல்லுறவை பேணிவரும் நிலையில் இலங்கையை தன் பக்கம் திருப்புவதற்கு இந்தியா பாடுப்படுகின்றது.
ரஸ்யாவில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இலங்கை ஊடகமொன்றிற்கு இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் அதிகாரி கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.
அதில் ரஸ்யாவில் இடம்பெற்ற தாக்குதலை இலங்கை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இலங்கை அரசை கவிழ்க்க வேண்டும் என்றால் இலங்கையின் முக்கிய இடங்களை ட்ரோன் மூலம் தாக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்” என்றார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan