காசாவுக்கு போன கப்பலை கடத்திய இஸ்ரேல்!
காசாவை நோக்கி மனிதாபிமான உதவிகளோடு பயணித்த "மாட்லீன் (Madleen)" எனும் இத்தாலியில் இருந்து புறப்பட்ட கப்பலை இஸ்ரேலியப்படை தொடர்ந்து பயணிக்க வேண்டாம் என எச்சரித்த நிலையிலும் தொடர்ந்து பயணித்த வேளை இஸ்ரேலிய கடற்படை இந்த கப்பலை காசாவிலிருந்து சுமார் 185 கிலோமீட்டர் தொலைவில் வைத்து கைது செயதுள்ளது.
இந்த கப்பலில் 12 மனிதாபிமான செயற்பாட்டாளர்களும் குழந்தைகளுக்கான பால்மா மற்றும் சில பொருட்களும் பயணித்த வேளை இஸ்லிய கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் பயணித்தவர்களில் கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg)என்ற ஸ்வீடனின் புகழ்பெற்ற சூழலியலாளர் மற்றும் ரிமா ஹஸன் (Rima Hassan) என்ற பிரான்சில் இருந்து வந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஓமர் ஃபயத் (Omar Faiad) என்ற அல்ஜசீரா செய்தி ஊடகத்துக்கான பத்திரிகையாளர் உட்பட பிரான்ஸ் ஜேமனி துருக்கி நெதர்லாந்து போன்ற நடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய அரசு இவர்கள் மனிதாபிமான செயற்பாண்டளர்கள் இல்லை இன்ஸ்டாக்கிராம் செயற்பாட்டாளர்கள் என்றும் இது ஊடக நாடகம் என்றும் விமர்சித்துள்ளது அதே நேரம் இவர்களின் சட்ட நிறுவனம் அவர்களை இஸ்ரேல் கடத்தியுள்ளதாகவும் அவர்களை எப்படி சர்வதேச எல்லையில் வைத்து கைது செய்யவும் முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த பயணம் ஏன் எதற்காக உண்மையில் காசா மக்களின் மனிதாபிமான தேவைகளுக்கு இதுபோதுமானதா என்ற கேள்விகளுக்கான பதிலையும் இதே போன்று இந்தியாவில் இருந்து 3 தடவையும் லண்டனில் இருந்தும் ஈழத்தமிழர்களுக்காக கப்பல் அனுப்ப்ப்பட்டது தொடர்பிலும் அதில் ஒரு தடவையில் பயணித்த 5000 பேர் பற்றியும் இதன் பின்விளைவுகள் அடைவுகள் பற்றியும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
