சி.வி.விக்னேஸ்வரனுடன் கூட்டணி அமைத்தார் சுமந்திரன்..
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரனும் இன்று மாலையில் நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டனர்.
இந்த உடன்படிக்கை இன்று மாலை கொழும்பில் உள்ள விக்னேஸ்வரன் இல்லத்தில் கையெழுத்திடப்பட்டது.
தமிழரசுக் கட்சி
உடன்படிக்கையின்படி நல்லூர் பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் தவிசாளர் பதவி தமிழ் மக்கள் கூட்டணிக்கும், அடுத்த இரண்டு வருடங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் வழங்கப்படுகின்றது.
இந்த உடன்படிக்கை நல்லூர் பிரதேச சபைக்காக மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டாலும், பிற இடங்களில் தமிழ் மக்கள் கூட்டணி இலங்கைத் தமிழரசுக் கட்சியை முழுமையாக ஆதரிக்கும் என்றும் தெரியவந்தது.
மேலதிக தகவல்: தீபன்










10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
