மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அநுர அரசு! 15 வீதத்தால் அதிகரித்தது மின் கட்டணம்
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15 வீதத்தால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணம்
இந்த மின் கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு(12) முதல் நடைமுறைக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இதனைத் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் இலங்கை மின்சார சபை (CEB) 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணங்களை 18.3 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்மொழியப்பட்டிருந்தது.
எனினும், தற்போது 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
