மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் – ரஞ்சன் ஜயலால்
மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் பிரதான தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரும் கடுவல நகரசபையின் நகரபிதாவுமான ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
கடுவல பிரதேசத்தில் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டணம் ஒரு தொகையினால் உயர்வடையும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தாம் குரல் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த மின் கட்டண அதிகரிப்பு நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய ஒன்று எனவும் மக்கள் அர்ப்பணிப்புக்களை செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கான மின் கட்டணத் திருத்தம் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளார்.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்வரும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த காலங்களில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்பை வெளியிட்ட பிரதான தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராக ரஞ்சன் ஜயலால் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 17 மணி நேரம் முன்
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
அமெரிக்க தடைகளை மீறி ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தொடரும் - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உறுதி News Lankasri