அநுர அரசின் மற்றுமொரு அதிரடி : பதற்றத்தில் பல சிறை அதிகாரிகள்
விசேட தினங்களில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பல மூத்த சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறது.
சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட கைதிகளை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
தேவையான நடவடிக்கை
அவர்களை கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில காலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் சிறையில் நடந்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. “இந்த சம்பவங்கள் அனுராதபுரம் சிறையில் மட்டுமல்ல. வேறு பல சிறைகளிலும் நடந்துள்ளன.
சிறை அதிகாரிகள்
எனவே, அனைத்து சிறைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பதிவுகள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
விசாரணைகள் முடிவடையும் நேரத்தில் மேலும் பல சிறை அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்,” என்று மூத்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
