24 மணித்தியாலத்திற்குள் சடுதியாக அதிகரிப்பை பதிவு செய்த அமெரிக்க டொலர்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது நேற்றையதினம் 303.97 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இன்றையதினம், 305.02 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
மேலும், டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது நேற்றையதினம், 296.24 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில், இன்றையதினம் 297.36 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது கனேடிய டொலர் மற்றும் யூரோவின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதுடன் பிரித்தானிய பவுண்டின் விலை இன்றையதினம் உயர்வடைந்துள்ளது.
இதன்படி, கனேடிய டொலரொன்றின் இன்றைய விற்பனை பெறுமதி மற்றும் கொள்வனவு பெறுமதி முறையே, 224.78 ரூபா மற்றும் 216.42 ரூபாவாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி மற்றும் கொள்வனவு பெறுமதி முறையே, 359.98 ரூபா மற்றும் 347.82 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி மற்றும் கொள்வனவு பெறுமதி முறையே, 417.36 ரூபா மற்றும் 403.97 ரூபாவாக பதிவாகியுள்ளது.