டொலர் மதிப்பின் அதிகரிப்பால் இலங்கைக்கு பெரும் சிக்கல்
கடந்த சில மாதங்களாக இலங்கை ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயரும் போக்கும், ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பதும் ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 1, 2025 நிலவரப்படி, ஒரு டொலரின் கொள்முதல் விலை 289ரூபாயக காணப்பட்டது. மேலும் டொலரின் விற்பனை விலை 297ரூபாயக காணப்பட்டது.
இருப்பினும், நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்த மாதம் 23 ஆம் திகதி, ஒரு டொலரின் கொள்முதல் விலை 295 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூபாயின் மதிப்பு
மேலும், அன்றைய விற்பனை விலை 304 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களில் ரூபாயின் மதிப்பு சுமார் ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. இதன் பாதகமான தாக்கம் பெரும்பாலும் நமது வெளிநாட்டுக் கடனில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுடன், வெளிநாட்டுக் கடனின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வெளிநாட்டுக் கடன்
தங்கம் மற்றும் பல விலைமதிப்பற்ற உலோகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தற்போது சுமார் 35 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
தற்போதைய விகிதத்தில் டொலரின் மதிப்பு ஒரு ரூபாய் குறைந்தால், வெளிநாட்டுக் கடன் அளவு 35 பில்லியன் ரூபாய் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமல்படுத்திய கடுமையான வரிக் கொள்கையைத் தளர்த்தாவிட்டால், இந்த நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
