மக்களின் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்: மகிந்த சிறிவர்தன சுட்டிக்காட்டு
நாட்டைப் பாதித்த கடுமையான பொருளாதார நெருக்கடியால் சரிந்த பொருளாதாரத்தையும், மக்களின் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அமெரிக்காவில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் நடத்தப்படும் 2025க்கான கூட்டங்கள் சமீபத்தில் தொடங்கின.
ஐந்தாவது தவணை
இந்த நேர்காணல் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் தலைமையில் வொஷிங்டனில் நடைபெற்றது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் மூத்த தலைவர் பீட்டர் பிரூவர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையில், இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (ECF) நான்காவது மறுஆய்வுக்கு ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாகக் குழுவிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, ஐந்தாவது தவணையாக இலங்கை 344 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
