இலங்கையின் சில பகுதிகளில் திடீர் மின் தடை
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 09, கொழும்பு 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளிலும் இவ்வாறு திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு
மின்சார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள மின் தடையை சீர் செய்ய தாமதமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
8 கோரிக்கைகளை அடிப்படையாகக் வைத்து இலங்கை மின்சார தொழிற்சங்கங்கள் நேற்றையதினம்(09.03.2026) பிற்பகல் 03 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு 24 மணிநேரத்திற்கு தொடரும் என்று இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மின்சார சபையில் மாற்றம் ஏற்படுத்தி புதிய நிறுவனங்களில் இணைப்பது ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளில் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்று இலங்கை மின்சார சபை மாற்றப் பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளார்.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri