மத்திய கிழக்கு போர் எதிரொலி - உலகப் பொருளாதாரத்தில் கடும் அதிர்வலைகள்!
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரே நாளில் 25 சதவீதம் உயர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தாக்கம் உணவுப் பொருட்கள் முதல் உலோகங்கள் வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வருவதால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம்
இதன் விளைவாக நேற்று திங்கட்கிழமை சந்தை தொடங்கியவுடன் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய் (Brent Crude) ஒரு பீப்பாய் 119.50 டொலராக உயர்ந்துள்ளது.

இது 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும் ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
மேலும் அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
முதலீட்டாளர்கள் டொலர் பக்கம் திரும்புவதால் தங்கம் விலை குறைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் எரிபொருள் விலை உயர்வால் சோயா எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களின் விலையும் அதிகரித்துள்ளது.
மேலும் போர் சூழலால் அலுமினிய விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்து ஒரு டன் 3,544 டொலராக விற்பனையாகிறது.
மத்திய கிழக்கு பதற்றம் தணியாத நிலையில், இந்தப் பொருளாதாரப் பாதிப்புகள் வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர் குறிப்பாக பணவீக்கம் அதிகரிப்பதால் வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்புகள் மங்கி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.