பிஃபா தலைவர் மீது ஐரோப்பிய, ஆசிய மற்றும் வட அமெரிக்க காற்பந்து கூட்டமைப்புகள் கடுமையான குற்றச்சாட்டு
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் சில வணிகப் பங்குகளைத் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில், FIFA தலைவர் ஜியாணி இன்ஃபான்டினோ ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய (UEFA), ஆசிய (AFC) மற்றும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் (CONCACAF) காற்பந்து கூட்டமைப்புகள் கூட்டாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
FIFA தலைவர் மீதான விமர்சனம்
இது தொடர்பில் குறித்த மூன்று பிராந்தியக் கூட்டமைப்புகளின் தலைவர்களும் பொதுச் செயலாளர்களும் இணைந்து வெளியிட்டுள்ள பகிரங்கக் கடிதத்தில், காற்பந்து விளையாட்டு என்பது எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமானதல்ல என்றும், அது வீரர்கள், இரசிகர்கள் மற்றும் உறுப்புச் சங்கங்களுக்கே சொந்தமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்ஃபான்டினோவின் இந்த நடவடிக்கை விளையாட்டுத் தலைவருக்குரிய பண்பு அல்ல என்றும் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

குறித்த சர்ச்சைக்குரிய வணிகப் பங்கு விற்பனைத் திட்டம் கைவிடப்பட்டு FIFA மன்னிப்புக் கோரியிருந்த போதிலும், இன்ஃபான்டினோவின் தலைமையை ஏற்க முடியாது என நோர்வே காற்பந்துச் சம்மேளனம் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கோரியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் அவருக்கு வழங்கி வந்த ஆதரவை மீளப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பை உலுக்கிய படுகொலை - பிரான்ஸில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்