அதிரடியாக கைது செய்யப்பட்ட சாகர காரியவசம் நீதிமன்றில் முன்னிலை
புதிய இணைப்பு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் சற்றுமுன்னர் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் குறித்து அவர் கூறியதாகக் தெரிவிக்கப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று (10.08.2026) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் குறித்து அவர் கூறியதாகக் கூறப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டார்.
வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம்

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO