மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி.. பதிவான வரலாற்றுச் சம்பவம்
இலங்கையின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனம், தனது 400ஆவது அவசர மருத்துவ ஹெலிகொப்டர் (HEMS) சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
மட்டக்களப்பு - வாழைச்சேனை வைத்தியசாலையில் தீவிர இதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு அவசரமாக வான்வழியாகக் கொண்டு செல்லுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இச்சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண பயணங்களை விடவும் அவசர மருத்துவ ஹெலிகொப்டர் சேவைகள் மிகவும் துல்லியமான திட்டமிடலைக் கோருபவை.
உடனடி வான்வழிப் பயணம்
இந்நடவடிக்கையின் போது நோயாளியின் உடல்நிலை மிகவும் சீரற்ற நிலையை எட்டியதால், உடனடி வான்வழிப் பயணத்தை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நீண்டகால வான்வழி மருத்துவ நிபுணரின் வழிகாட்டலில், வைத்தியசாலையின் அவசர மருத்துவக் குழுவினர் நோயாளியின் நிலைமையை தீவிரமாக கண்காணித்து நிலைப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், ஆண்டின் இக்காலப்பகுதியில் நிலவும் பலத்த கச்சான் காற்று மற்றும் சீரற்ற வானிலை போன்ற சவால்களுக்கு மத்தியிலும், சூரிய அஸ்தமனத்திற்கு முன் நோயாளியைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயமும் நிலவியுள்ளது.
நோயாளி நிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிற்பகல் 2:20 மணிக்கு கொழும்பிலிருந்து அனுபவமிக்க விமானி கெப்டன் அமல் வாகித் தலைமையில் ஹெலிகொப்டர் புறப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, நோயாளிளை பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO