இஷாரா செவ்வந்திக்கு மீண்டும் விளக்கமறியல்..
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைபடுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் முக்கிய சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இவர் மீது, சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியைக் கொண்டு சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலைமறைவாக இருந்த அவர், 2025 ஒக்டோபரில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் மீண்டும் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS..