நாமல் ராஜபக்ச -சரித் அபேசிங்க ஆகியொருக்கிடைலான நட்பு! அம்பலமாகியுள்ள பல இரகசிய தகவல்கள்..
போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்து பிணையில் வந்துள்ள சரித் அபேசிங்க முதன் முறையாக வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தனக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் குறிப்பாக நாமல் ராஜபக்சவுடன் இருந்த நெருங்கிய தொடர்பு மற்றும் அவரிடம் இணைந்து பணியாற்றிமை தொடர்பில் முதல் முதலாக பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
2005-இல் தான் எனக்கு அரசியலில் முதல் நண்பர்கள் கிடைக்கிறார்கள். லண்டனில் நாமல் ராஜபக்ச. அவர் 2005-இல் இலங்கையிலிருந்து லண்டனுக்கு வருகிறார். அதற்குப் பிறகு 2006 முதல் 2008 வரையான காலப்பகுதியை நான் அவர்களோடுதான் கழித்தேன்.
லண்டனில் நெருக்கமான நாமலின் உறவு
அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரும்போது நான் திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். அந்தத் திரைப்படத்தின் பிரீமியர் காட்சிப் புகைப்படங்கள் வலையொளி தளத்தில் இருக்கின்றன.
அந்த பிரீமியர் காட்சியில் நாமல் உட்பட்ட அன்றைய அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் நான் இலங்கையின் கலாசாரக் குழுவில் இருந்தேன். மகிந்த யாப்பா அபேவர்தன என்னுடன் லண்டன் வந்தார்.
அந்தச் சமயத்தில் ரன்மிதன்ன திரைப்பட கிராமம் தொடங்கப்பட்டிருந்தது. அதன் முதல் தலைவராக நான் இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் என்னை அதிலிருந்து நீக்கினார்கள்.

இளம் வயதான எனக்கு குறித்த பதவி பொறுத்தமில்லை என்ற வாதம் வலுப்பட்டது. அப்போது மகிந்த ராஜபக்ச என்னை அழைத்து "சரித்இ நீங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவர்.
நீங்கள் என்னோடு கோபித்துக் கொண்டால் என்னால் அரசியல் செய்ய முடியும். ஆனால் எனது பங்குதாரர்கள் கோபித்துக் கொண்டால் என்னால் இந்த நேரத்தில் அரசியல் செய்ய முடியாது.
அதனால் நீங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்" என்று கூறினார். நான் சரி என்று சொன்னேன். நாமல் ராஜபக்ச இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் அவரிடம் கேட்கலாம்.
எனக்கும் நாமலுக்கிடையே மிக நெருக்கமான ஒரு நட்பு ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது. எனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அன்றே அவர்களிடம் சொல்லியிருக்கலாம் "மச்சான் எனக்கு அரசியல் செய்ய வேண்டும்" என்று.

2010ல் நாமல் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடும் போது முழுநேரப் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.பிரசாரத்தை முடித்துவிட்டே சென்றேன்.
நான் சமீபத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னவுடனேயே நாமலிடமிருந்து வந்த முதல் அழைப்பு "அடேய் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இவ்வளவு நாளாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்பதுதான்.
நான் சொன்னேன் "உண்மையிலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் அப்போது இருக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அநுரவின் தீர்மானம்.. ஜி.எல். பீரிஸ் விடுத்த பகிரங்க சவால்